கேரளாவில் யுஜிசி விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் விசாரணையின் முடிவில், 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.