Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டான கை விரல்கள்….. சகோதரிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சகோதரியை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் காடுவெட்டி பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆயிஷாவின் சகோதரர் ரியாஸ் என்பவர் தனது ஆட்டோவின் ஆர்.சி புத்தகத்தை அடமானம் வைத்து ஆயிஷாவுக்கு 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு ஆயிஷாவிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த ரியாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆயிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ஆயிஷாவின் இடது காது அறுந்துவிட்டது. மேலும் அவரின் இடது கை விரல் துண்டானது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஆயிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரியாஸை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |