Categories
உலக செய்திகள்

துண்டிக்கப்பட்ட தலையுடன்…. விமான நிலையத்தில்…. பிடிபட்ட இளைஞரின் பின்னணி…!!

இளைஞர் ஒருவர் தன் பாட்டியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த வழக்கிற்கு மேல்முறையீடு செய்துள்ளார். 

சுவிற்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் fraunfeld என்ற நகரில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தன் பாட்டியை கழுத்தை நெறித்து கத்தியால் குத்திக் கொலை செய்த்துள்ளார். மேலும் துண்டிக்கப்பட்ட தலையை சூரிச் விமான நிலையத்தில் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சூரிச் விமான நிலையம் மூலமாக ஸ்பெயின் நாட்டிற்கு தப்பித்து செல்வதற்காக நின்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் முதுகுப்பையில் வைத்திருந்த துண்டிக்கப்பட்ட பாட்டியின்  தலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் மருத்துவ சோதனையில் இந்த இளைஞர் உளவியல் பாதிப்புடையவர் என்பது உறுதியானது.

எனவே நீதிமன்றம் இவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று கூறி குறுகியகால காவல் தண்டனையுடன் 15 வருடங்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறுமாறு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் தனக்கு அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளார். மேலும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த இளைஞர் 2015ம் வருட முதல் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு நண்பர்கள் யாரும் இல்லை மற்றும் வேலையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைச் சேர்ந்த இந்த இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த இளைஞரின் சார்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு மண்டல உயர்நீதிமன்றத்தின் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |