பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த தன்னை தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்பின் திருப்பித் தாக்கி விரட்டியடிக்கும் வீடியோவானது வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அங்கிருந்த ரசிகர்களுக்கு மத்தியில் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின் அவரை நீச்சல் குளத்தை விட்டு ஓட ஓட விரட்டியது. இந்த சம்பவத்தின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பீட்டா அமைப்பு, பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது