மார்ச் 24ஆம் தேதி அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கே சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரங்கை அவர் திறந்து வைத்தார் . இந்த துபாய் பயணத்தின் மூலம் முதலமைச்சர் 6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள்ளார் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அபுதாபியில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டார்.
பின்னர் தனி விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது,,” துபாய் பயணம் சிறப்பாக அமைந்தது தமிழகம் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் என துபாய் தொழில்துறையினர் பாராட்டினர். 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த புதிய ஒப்பந்தங்களின் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.” என அவர் கூறினார்.