துபாயிலுள்ள தனியார் நிறுவனம் அருகில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லக்கூடிய ஒரு பேருந்து வெகு நாட்கள் ஆகியும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து திடீரென காணாமல் போய்விட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பேருந்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அந்த பகுதியிலுள்ள குடோனில் பணிபுரிந்து வந்த 2 பேர் பேருந்தை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் 34 ஆயிரம் திர்ஹாமுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேருந்தை திருடி விற்ற 2 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 84 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.