பாம் ஜூமைரியா தீவில் 80 மில்லியன் டாலர் மதிப்பு வில்லாவை முகேஷ் அம்பானியின் ஆர் ஐ எல் நிறுவனம் வாங்கி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் லண்டனில் பிரம்மாண்டமான பண்ணை விடு அவர் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அவர் துபாயிலும் புதிய சொத்தை வாங்கி இருக்கின்றார். துபாயின் மிகவும் பிரபலமான தீவு பாம் ஜூமைரியா இது பனைமரம் போன்ற வடிவத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவாக அமைகின்றது.
இங்கு முகேஷ் அம்பானி 650 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவை வாங்கி இருக்கிறார் தனது இளைய மகன் ஆனந்திற்காக இந்த வருடம் தொடக்கத்தில் இதை அவர் வாங்கி இருக்கின்றார். மேலும் முக்கியமான வர்த்தக சுற்றுலா நகரமான துபாயில் இதுவரை யாரும் வாங்கிடாத விதமாக முதன் முறையாக மிகப்பெரிய தொகைக்கு இதை அவர் வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாம் ஜூமைரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த விழாவில் 10 படுக்கை அறைகள் அமைந்திருக்கிறது. ஒரு ஸ்பா மற்றும் வெளிப்பகுதியில் நீச்சல் குளம் அமைந்திருக்கின்றது. துபாய் அரசானது தற்போது உலக நாடுகளில் இருக்கும் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகின்றது. மேலும் வெளிநாட்டினர் சொத்துக்களை வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் விதிமுறைகளையும் பெரிய அளவில் நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் அம்பானி வாங்கியுள்ள வில்லாவிற்கு அருகே பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பேக்ஹாம் அவரது மனைவி போன்றோர் குடியிருப்பை வாங்கி இருக்கின்றார்கள்.