துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்ற நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரபல நடிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். 2022 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் நடைபெறும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா தனது தாயின் பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கொச்சியில் கொண்டாடினார்.
பின்னர் தன்னுடைய பிறந்தநாளையும் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதனையடுத்து இவர்கள் இருவரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றிருந்தனர். அப்போது ‘பட்டாஸ்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிகை நகரின் மெஹ்ரின் பிரஸ்தா என்பவரை துபாயில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சந்தித்துள்ளனர் மற்றும் அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர் . இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.