ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்..
சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த லீக் போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளது. ஜனவரி மாதம் இப்போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காகவும், கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய வீரருமான ராபின் உத்தப்பா சில மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.. அதேபோல இந்திய முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய யூசுப் பதானும் ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.