தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக் கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக விஜய் தனது அப்ப இங்கே தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியிடப் படக் கூடிய முடிவு செய்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட பல குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று துபாய்க்கு விஜய் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.