Categories
மாநில செய்திகள்

துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின்… என்னென்ன பிளான்…? வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார். மு க ஸ்டாலின் இன்று(24.03.2022) மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார்.

அங்கு உலக கண்காட்சிகள் மிக பழமையான மற்றும் மிக பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த நிகழ்வானது நடத்தப்படுகிறது. மேலும் இது ஆறு மாத காலங்களுக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ கண்காட்சி மத்திய கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலகக் கண்காட்சி ஆகும். இந்த உலகக் கண்காட்சி துபாய் நாட்டில் அக்டோபர் 1, 2020 அன்று முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது.

இந்த உலகக் கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், பங்கேற்றிடும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் அங்கம் வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |