தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை சென்னையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இவர் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். இந்த சகண்காட்சி 5 வருடங்களுக்கு ஒருமுறை 6 மாதம் வரை நடைபெறும். இந்த கண்காட்சி உலகின் மிகப் பழமையான சர்வதேச நிகழ்வாகும். இங்கு நடத்தப்படும் எக்ஸ்போ கண்காட்சி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் முதல் உலக கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி அக்டோபர் 1 முதல் மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது.
இந்த புகழ்பெற்ற கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மார்ச் 25-ஆம் தேதி தமிழ்நாடு அரங்கினை திறந்துவைக்கிறார். இந்த அரங்கில் உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள், மின்னணுவியல், தகவல், தமிழ் வளர்ச்சி, ஜவுளி, கைவினைப் பொருட்கள், கைத்தறி, கலை, கலாச்சாரம், சுற்றுலா, மருத்துவம், தொழில் துறை போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்து காட்சிப்படமாக திரையிடப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலைகள், மின்னணுவியல் சாதனங்கள், மின்சார வாகனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் போன்றவற்றின் படங்களும் திரையிடப்பட உள்ளது. இந்த அரங்கத்தில் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த சிறப்புகளையும் காணமுடியும். இந்த மாபெரும் கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகள் கலந்து கொள்கின்றது. இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் முதல்வரின் இந்த பயணம் மூலம் துபாய் மற்றும் அபிதாபி நாடுகளுடன் பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்த நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரி ளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.