ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உரையாற்றும்போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மார்புப் பகுதியில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சரிந்தார்.
இதனையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.