Categories
உலக செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பதிலடி தர தாமதம்…. காவல்துறை அதிகாரி அதிரடி பணிநீக்கம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில்  ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம் தான், இந்தளவு உயிரிழப்பிற்கான காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல்துறையினர் வந்து நடவடிக்கை எடுப்பதில் 77 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து விடுப்பில் இருந்து வந்த அவரை பணி நீக்கம் செய்வதற்கு உள்ளூர் பள்ளி வாரியம் ஒருமனதாக ஓட்டு போட்டுள்ளது. அவரை பணி நீக்கம் செய்வதற்கு உள்ளூர் பள்ளி வாரியம் ஓட்டு போட்டபோது அந்த அறையில் ஆரவாரம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இது தொடர்பான கூட்டம் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டவர்கள் அந்தப் காவல்துறை அதிகாரி கோழை என கோஷமிட்டதாகவும் அங்கு தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Categories

Tech |