அமெரிக்கா நாட்டில் ஹூஸ்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கட்டிடத்திற்கு தீ வைத்தார். இந்த தீயில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர், சுமார் 40 வயதுடையவர் என்றும் ஹூஸ்டன் காவல்துறை அதிகாரியால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் 8020 டன்லப் தெருவிலுள்ள பல அறைகள் கொண்ட வாடகை விடுதிக்கு தீ வைத்துள்ளார். அங்கு அவர் நீண்ட காலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு மற்றவர்கள் வெளியே வரும் வரை காத்திருந்தார் என்று காவல்துறைத் தலைவர் டிராய் கூறியுள்ளார். கொல்லப்பட்ட நான்கு பேரில் சந்தேக நபரும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள், அவர்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள் என்று நம்பப்படுகின்றது.