Categories
உலக செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாரா எனும் இடத்தில் பொதுக்கூட்டம்உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் யார் சுட்டார்கள் என்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷின்சோ அபே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் நாளை ஜூலை 9ஆம் தேதி தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |