தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் உலகின் அரிதான ஆண்டோலியோ ஜோலி துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள். வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வருவதாகவும்,கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் துப்பாக்கி சுடுதலில் நடிகர் அஜித் பல பதக்கங்களை வென்று வரும் நிலையில், ரம்யா பாண்டியனும் அந்த பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/msMAnO-TJ5U