Categories
மாநில செய்திகள்

துப்பாக்கியை தொலைத்த ஐஜி…. சர்ச்சையாகும் விவகாரம்…!!!!!!

பொன் மாணிக்கவேல் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு அறியப்படுகிறார். இந்நிலையில் இவர்  தனது துப்பாக்கியை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தொலைத்ததாக கூறப்படுகிறது.

ரயில், பராமரிப்பு பணிகளுக்காக சென்றபோது, ஊழியர்களால் 8 தோட்டாக்கள் உடனான  பிஸ்டல் கண்டெடுக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அறிந்த பொன்மாணிக்கவேல் துப்பாக்கி தன்னுடையது தான் என முறையிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

Categories

Tech |