அமெரிக்காவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மெம்பீஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேமி ஜென்கிங்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார். அதன்பின்பு காரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்திய ஜேமி ஜென்கிங்ஸ் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அழித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜேமி ஜென்கிங்ஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.