குரோஷியாவின் ஓசிஜெக்கலில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராகி சரனோபாத் தங்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மே 12ம் தேதி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களில், இந்திய வீராங்கனை ராகி சரனோபாத் தங்கம் வென்றார். 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் 39 புள்ளிகள் பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது இடத்தை பிரான்ஸ் வீராங்கனை மதில்டா லாமோழி, மூன்றாவது இடத்தை ரஷ்ய வீராங்கனை விடாலினா என்பவர் கைப்பற்றினார்.