Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய ரஷ்யா…. நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் வீரர்…. வெளியான தகவல்….!!

ரஷ்ய படைவீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து வெளிவந்த தோட்டா உக்ரேன் வீரரின் பாக்கெட்டிலிருந்த ஐபோனில் பாய்ந்ததால் அவரது உயிர் நூலிலையில் தப்பியுள்ளது.

உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரேன் வீரர்களை நோக்கி ரஷ்ய படையினர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள்.

இதில் ரஷ்ய வீரர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 7.2 மில்லிமீட்டர் தோட்டா உக்ரைன் வீரர் ஒருவரின் உடலில் நுழையாமல் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோனில் பாய்ந்துள்ளது. இதனையடுத்து ஐபோனை பார்த்தபோது தான் தனது உயிர் நூலிழையில் தப்பியது அந்த உக்ரேன் வீரருக்கு தெரியவந்துள்ளது.

Categories

Tech |