Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையினரால் சுட்டப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த வீரவேல் சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |