சூர்யாவின் ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸின் டுவிட்டர் பதிவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் சென்ற வருடம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வசூலில் அள்ளிச் சென்றது. இதையடுத்து இந்த வருடம் ரிலீசான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அடித்து நொறுக்கியது. இந்நிலையில் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகின்ற நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படமும் வசூல் சாதனை படைக்கும் என அனைவர் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Thalaivan Swag🤣🤣🔥🔥🔥#ARMURUGADOSS #Varisu #ThalapathyVijay𓃵 #HBDDearThalapthyVijay https://t.co/3rbfe7tL6L
— RevinzJr26 (@RevinzJr26) June 25, 2022
இந்த நிலையில் விஜய் திரைப்படத்திற்கு வசூல் சாதனைக்கு துவக்கமாக இருந்த திரைப்படம் துப்பாக்கி என்று சொல்லலாம். சென்ற 2012 ஆம் வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகாஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சூர்யா ரசிகர் ஒருவர் முருகதாஸை டேஹ்(tag) செய்து இந்த வருடம் சூர்யாவின் மாற்றான் திரைப்படம் தான் அதிக வசூல் செய்யும். மற்றவர்கள் ஒதுங்கி இருங்கள் என பதிவிட்டதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் பாப்பா கொஞ்சம் தள்ளி போய் விளையாடு என பதிலளித்தார். அதுபோலவே துப்பாக்கி திரைப்படம் தான் அந்த வருடம் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது. இந்நிலையில் இந்த ட்விட்டர் பதிவானது 10 வருடங்கள் கழித்து தற்போது வைரலாகி வருகின்றது.