இந்தியா மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்திலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பற்ற சூழல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தனியாக வெளியே விடுவதற்கே பயப்படுகின்றனர்.
அந்தவகையில் சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.