கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அவர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரஹோஹர் என்ற பகுதியில் உள்ள அரோன் ரோடு என்ற சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காரை இடைமறித்து துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த பெண்ணின் கணவரை காரைவிட்டு இறங்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர் அந்த இருவரில் ஒருவர் அந்தப் பெண்ணை அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அதை அந்த பெண்ணின் கணவர் தடுக்க முயற்சித்த போது சுட்டு விடுவேன் என்று மற்றொரு நபர் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெ புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புகாரின்பேரில் போலீசார் சோனு (32), சுமீர் சிங் பர்மீர் (30) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.