Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்… தப்பியோடிய டிரைவர்… பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு..!!

பெரம்பலூரில் கரும்பு லாரி சைக்கிளின் மீது மோதியதில் துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் துப்புரவு தொழிலாளியாக நன்னை ஊராட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மருதமுத்து வேப்பூர் கிராமத்திற்கு நன்னை கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்துள்ளார். அப்போது எறையூர் சர்க்கரை ஆலை நோக்கி புதுவெட்டக்குடி கிராமத்திலிருந்து 2 டிப்பர்கள் இணைக்கப்பட்ட லாரி ஒன்று கரும்புகளை ஏற்றுக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக மருதமுத்து சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் மருதமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே மருதமுத்து பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் டிரைவரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |