Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியின்போது இறந்த 2 தொழிலார்கள்…. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இச்சூழ்நிலையில் அந்த 2 பேரின் குடும்பத்துக்கும் இழப்பீடாக தலா ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக நெல்சன் மனைவி ஜான்சா ஆரோக்கியதாஸ், ரவிகுமார் மனைவி புனிதாவிடம் தலா ரூபாய் 15 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்துக்கான நிவாரணத்தொகை காசோலையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை தலைமை செயலகத்தில் வைத்து நேற்று வழங்கினார்.

Categories

Tech |