Categories
தேசிய செய்திகள்

துப்பு கொடுத்த நாய்… பெண்ணை வன்புணர்வு செய்த வாலிபர்களுக்கும் நேர்ந்த கதி… நாய்க்கு குவியும் பாராட்டு…!!!

ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை ஒரு மோப்பநாய் கண்டுபிடித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம், வதேரா என்ற பகுதியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான முப்பத்தி எட்டு வயதுடைய பெண் ஒருவர் வயல் பகுதியில் வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

பின்னர் ஜாவா என்ற டாபர்மேன் மோப்ப நாயை கொண்டு குற்றவாளிகளை பிடிப்பதற்கு திட்டமிட்ட அவர்கள் அந்த பெண்ணை கொலை செய்த இடத்தில் கிடந்த வாட்டர் பாட்டில்கள், அந்த பெண்ணின் சேலை போன்றவற்றை மோப்பம் பிடிக்க செய்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நாய் ரயில்வே பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குடிசையை பகுதிக்குள் சென்றது. அங்கு ஒரே ஒரு குடிசைக்குள் சென்று குலைக்க ஆரம்பித்தது. அதன் பின்னாலே சென்ற போலீசார், குடிசைக்குள் சென்று குற்றவாளியை கைது செய்தனர். தனது மோப்ப சக்தியின் மூலம் 20 நிமிடத்தில் குற்றவாளிகளை பிடித்து அனைவரது பாராட்டையும் ஜாவா என்ற நாய் பெற்றுள்ளது.

Categories

Tech |