நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நின்றுவிடுகிறது. இதையடுத்து நேற்று இரண்டாவது முறை பழுது ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பழுது ஏற்படுவதால் தாங்கள் எண்ணிக்கையை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் துயரமாக மாறுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.