அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வீடற்றவர்களுக்கான இல்லத்தில் பிறந்து 15 மாதங்களேயான குழந்தை ஒன்று இறந்த தாயாருடன் 5 நாட்கள் போராடிய சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 26 வயதுடைய shelbi என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 4 மாதங்கள் தனது கணவரிடமிருந்து பிரிந்து வீடற்றவர்களுக்கான இல்லத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி shelbi அதிக மருந்தினை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். அவ்வாறு உயிரிழந்த தாயாருக்கு அருகே பிறந்து 15 மாதமான குழந்தை ஒன்று நீர்ச்சத்து குறைந்தும், உடல் முழுவதும் மனித கழிவுகளுடனும் சுமார் 5 நாட்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் shelbi தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வீடற்றவர்களுக்கான நகர நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்கள்.
அதன்பின்பு shelbi யின் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.