50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தற்போது கோடை வெயில் காரணமாக நாய்களின் வெறி தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தெருநாய்கள் 50-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி கடிப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.