ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி தெரிகிறது. இந்த நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் பொது மக்களை கடிக்கிறது. இந்நிலையில் தெரு நாய் 2 வயது குழந்தையான காவியா, சுந்தரவல்லி(70) திலகவதி(60), ராமச்சந்திரன்(70) ஆகிய நான்கு பேரையும் கடித்தது.
இதனால் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்கள் தொந்தரவு குறித்து புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.