தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் முன்பு ஆஜராவதிலிருந்து நடிகர் ரஜினிகாந்துக்கு விலக்கு கோரியிருக்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விசாரிப்பதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது .
ஆனால் ரசிகர்கள் ஆஜரானால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து , சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக முடியாது என்றும் , ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தனக்குரிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தந்தால் அதற்குரிய பதிலை தர தயாராக இருப்பதாகவும் ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் . இதையடுத்து நடிகர் ரஜினிக்கு எதிரான ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அதில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு ரஜினிக்கு எதிரான கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
https://twitter.com/nikkimala1/status/1231168580097585152