ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியில் ரங்கசாமி- மைலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மைலாக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கிட்டாபாளையம் வனப்பகுதியில் சென்றபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார்.
பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவினருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.