Categories
லைப் ஸ்டைல்

துரித உணவுகளை தயவுசெஞ்சு சாப்பிடாதீங்க… ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்..!!

 பிட்சா, சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம்.

இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் படுத்தியதால் தான் அறுபது, எழுபது வயதுகளில் கூட நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

ஆனால் தற்போது இளம் வயதிலேயே அடிக்கடி நோய்வாய்பட்டு விடுகின்றனர். இதற்கு காரணம் நமது உணவு மாற்றம் முறை. தற்போது பண்டைய உணவுகளை விட பீட்சா, பர்கர் தான் அதிகம் சாப்பிடுகின்றனர். இது எவ்வளவு ஆபத்து என்பதை பலரும் உணருவதில்லை. எந்த வகையில் நம் உடலை பாதிக்கின்றது என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. வீட்டு உணவை விட வெளியில் சாப்பிடும் அதாவது துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் நபர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வு கூறுகின்றது.

மேலும் உடலில்  ஹார்மோன்களின் சமநிலை மோசமடைந்து மன நலம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நம் உடலில் அதிக கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை இந்த பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகளால் ஏற்படுத்துகிறது. துரித உணவுகளை உட்கொள்வது மாரடைப்பை ஏற்படுத்துகிறது . மேலும் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று அபாயமான உணவுகளை நாமே வாங்கி கொடுத்து குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கின்றோம். நாமும் நல்ல உணவு பழக்கங்களை பின்பற்றி, அவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். அவர்களும் ஆரோக்கியமான தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.

Categories

Tech |