துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 18வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் துருக்கியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 இலட்சத்தை எட்டியுள்ளது.
மேலும் துருக்கியில் ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த எண்ணிக்கை 2,50,542 ஆக அதிகரித்துள்ளது. 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,996 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.