இஸ்ரேல்-துருக்கி இடையில் பல வருடங்களாக மோதல் போக்கானது நிலவி வருகிறது. பாலஸ்தீனம் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இஸ்ரேல்-துருக்கி இடையிலான விமானச் சேவையில் பல வருடங்களாக அசாதாரணம் சூழ்நிலை நிலவிவருகிறது. துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் இருக்கிறது. அத்துடன் துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ் அஸ் ஏர்லைன்ஸ் போன்ற 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல்நாட்டின் எந்த விமானம் நிறுவனமும் துருக்கிக்கு விமான சேவையை மேற்கொள்வதில்லை. இதனிடையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்காக ஏற்படும் அதிகபட்சம் செலவு காரணமாகவும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை மேற்கொள்வதை சென்ற 15 வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல்-துருக்கி இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற மார்ச்மாதம் இஸ்ரேலிய அதிபர் ஐசக்ஹர்சொஹ் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு துருக்கி அதிபர் எர்டோகனை, இஸ்ரேலிய அதிபர் ஐசக் சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பிறகு இருநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்தனர். இந்த சந்திப்புகள் மற்றும் இருநாட்டு உறவில் நிலவிய முன்னேற்றத்தை அடுத்து 15 வருடங்களுக்கு பின் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கயுள்ளது. இன்னும் சில தினங்களில் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.