மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் இந்த படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.