அதிமுகவில் ஒன்றிய தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.