திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேருந்து நிலையத்தின் அருகே ஆடிட்டிங் அலுவலகம் ஒன்று ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்று கட்டிடத்தை சுற்றி வந்தபோது ஆடிட்டிங் அலுவலகம் செல்லும் வழியில் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார். இதனை தொடர்ந்து காவலாளி உடனடியாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்தவர்கள் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் உயிரிழந்தது புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா என்பதும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சத்யாவிற்கு மாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதோடு நாளடைவில் அவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதும் சம்பவத்தன்று மாறன் சத்யாவை வரவழைத்ததும் கட்டடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியானது.
இரவு 7 மணி அளவில் சத்யாவை மாறன் அழைத்து சென்றுவிட்டு பின்னர் 10 மணி அளவில் கட்டிடத்தை விட்டு மாறன் மட்டும் வெளியே வந்தது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சத்யாவை அழைத்து வந்த மாறன் அவருடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில்சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மாறனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.