Categories
தேசிய செய்திகள்

துரோகம் செய்த தோழி…! குளிர்பானத்தில் மயக்கம் மருந்து…. கேரளாவில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!

கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் மலர். இதில் மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்புகொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலைவாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட மலர் அப்பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். அவ்வாறு கேரளா வந்தால் அவருக்கு வேலைவாங்கி தருவதாக மலர் கூறினார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் சென்ற மாதம் 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் கண்ணூர் சென்றார்.

அதன்பின் கண்ணூரில் தங்கி இருந்த தமிழக பெண் போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அவற்றில் “உறவினர் வீட்டில் தங்கி இருந்த தன்னிடம் மலர் வீடு மாறி செல்வதாக கூறினார். இதனால் நானும் மலருடன் சென்றேன். அப்போது அங்கு சென்றதும் தனக்கு குளிர் பானம் கொடுத்தனர். அவற்றில் மயக்க மருந்து கலந்துள்ளனர். அதை குடித்ததும் நான் மயங்கிவிட்டேன். அதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் என்னை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.

கண் விழித்து பார்த்த பிறகுதான் இந்த விவகாரம் எனக்கு தெரியவந்தது. ஆகவே இவற்றில் என்னை அந்த வீட்டிற்கு அழைத்துசென்ற மலருக்கும் தொடர்புள்ளது. எனவே காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தமிழக பெண் புகாரில் குறிப்பிட்டிருந்த மலரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின்படி ஒரு வாலிபர் உட்பட 3 பேரை கண்ணூர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |