ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்ப பிரஸ்ஸுக்கு ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் நானு. என்னன்னு கேட்டீங்கன்னா. முன்னாள் அமைச்சர்கள் ஆறு, ஏழு பேர், பெயரை சொல்ல விரும்பல, எங்களுக்கு தெரியும்.. எனக்கு மிஸ்டர் வைத்தியலிங்கத்திற்கு, மிஸ்டர் மனோஜ் பாண்டியனுக்கு, ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியும். இங்கே தாவி ஓபிஎஸ் அண்ணனிடத்திலே வருவதற்கு ஆறேழு, முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதற்கு தலைமை தாங்குவதே ஜெயக்குமார் தான். மீதி பேர வா என்கிறோம்.. ஜெயக்குமார் மட்டும் வேண்டாம்னு முடிவெடுத்துருக்கோம். அவர சேர்க்காதன்னு சொல்லிட்டு இருக்கோம். அந்த வேலையை திருப்பி இவர் வேற வேலைய பாத்துட்டு இருக்காரு. ஆனா போற இடத்துல எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் வேற வேலையே கிடையாது.
சமீபத்தில் பார்த்தீங்கன்னா இந்த அரசு செயல்பாடுகள் குறித்து தெளிவாக பேசும் போது, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் ”த ரூல் கர்வ்” அப்படிங்கறது புதுசா இருக்கு. முல்லைப் பெரியாறு டேம் விஷயத்துல ”ரூல் கர்வ்” அப்படிங்கறத யார் கொண்டு வந்தா, 142 அடி வரைக்கும் உயர்த்திக்கலாம் அப்படிங்கிற தீர்ப்பு இருக்கும்போது அத கேரளா அரசு பிளே பண்ணுது.
”த ரூல் கர்வ்” அப்படின்னு சொல்லி அதை தடை செய்வதற்கு எல்லா வேலைகளையும் செய்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுல வந்து ஓபனா யார் கொண்டு வந்தாங்க மத்திய அரசா? மாநில அரசா? 2018 ல யார் சிஎம் இதெல்லாம் இந்த தமிழக அரசு விளக்க வேண்டும்னு சொல்றாரு. அதே மாதிரி தான் இந்த பொதுப்பணி துறையிலும் விளக்க வேண்டும்னு கேக்குறாரு. எங்கெங்கு பொது பிரச்சினைகள் இருக்கிறதோ அதெல்லாம் முன்வைத்து ஓபிஎஸ் அண்ணன் அத்தனை இடங்களிலும் அதை பேசுகிறார்.
ஆனா போற இடத்துல எல்லாம் திட்றது கன்னாபின்னான்னு பேசுறது. இந்த வேலையை தான் ஜெயக்குமார் வச்சிட்டு இருக்காரு. ஜெயக்குமாருக்கு சொல்றேன் யாரு சேருறாங்க.. யாரு போறாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். உங்கள மட்டும் சேர்த்துக்கவே மாட்டோம். வேறு யார் வந்தாலும் சேர்த்துக்கலாம்னு முடிவில் இருக்கோம். அத முதல்ல ஜெயக்குமார் புரிஞ்சிக்கணும்” என்று பேசியுள்ளார்.