Categories
அரசியல்

நான் ஒன்றும் பாஜகவின் “பி டீம்” அல்ல…. புலம்பி தள்ளிய சீமான்…!!!

சென்னையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும் இத்தனை ஆண்டு காலமாக நாட்டை ஆட்சி செய்து மோசமான நிலைக்கு தான் தள்ளி இருக்கின்றன. பணம் இருப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றால் இங்கு நல்ல மக்கள் ஆட்சிக்கு இடமில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது என போராடிய முன்னோர்களின் நம்பிக்கை தற்போது பொய்யாகி உள்ளது.

வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு அளிக்க வேண்டாம். சீமானுக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவை சேரும் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது நான் ஒன்றும் பாஜகவின் ‘பி’ டீம் அல்ல. நாங்கள் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை தேவை பூர்த்தியாகும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நடைபெறவிருக்கும் 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். சென்னையை பொருத்தவரை அது திமுகவின் கோட்டை அதில் பாஜக ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது என குழந்தைத்தனமாக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். இதெல்லாம் அவர்களுக்கு சிரிப்பாக இல்லையா.? என்று பேசியுள்ளார்.

 

Categories

Tech |