Categories
தேசிய செய்திகள்

துர்க்கை சிலை கரைக்கும் போது “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் பலி” …. மீட்பு பணியில் களமிறங்கியுள்ள அதிகாரிகள்….!!!!!

துர்க்கை அம்மனை கரைக்க சென்ற போது ஆற்றில் மக்கள் அடித்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் விநாயகர் சிலையை  கரைப்பது போல் அவர்கள் 10 நாட்களுக்கு துர்க்கை அம்மனுக்கு  பூஜை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். அதேபோல் நேற்று மேற்கு வங்காளத்தில் உள்ள மால் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்கை அம்மன்  சிலையை கரைக்க வந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு திரண்டு இருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில்  அடித்து செல்லப்பட்ட7 பேரின்  சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாயமான பலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில்  துர்கா அம்மன்  சிலை கரைக்கும்  போது கொத்துக்கொத்தாக மக்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சியை அங்கிருந்த வேறு சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |