தம்பதியினர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் தம்பதியினரின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியினர் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இருரது சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போதிய வருமானம் இல்லாததால் தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனரா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பேரும் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.