Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கான சித்திரை மாத பலன்… 75% நன்மைகள் நடக்கும்…திடீர் மாற்றங்கள் நடக்கும்..!!

துலாம் ராசிக்கான சித்திரை மாத ராசிபலன்கள்..!  சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் ராசி பலன்கள் என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  சித்திரை மாதத்தில் உங்களுக்கு நடக்கக்கூடிய சுப அசுப பலன்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள்,

வண்ணங்கள் மற்றும் சந்திராஷ்டம தினங்கள் இவைபற்றி அறிவதற்கு முன்னாடி உங்களுடைய ராசிக்கு இரண்டு தெய்வங்கள் உண்டு. எப்பொழுதும் உங்களை காப்பாற்றும் தெய்வம் அதை எப்பொழுது மறந்துவிடாதீர்கள். தெய்வத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்தால் சகல இன்னல்களும் விலகி ஜாதக தோஷங்கள் விலகி சிறப்பாக இருக்கலாம். ராசிநாதன் சுக்கிர  பகவானும்,  மகாலட்சுமியும் அவர்களை வணங்கி இம்மாத நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்.

ராசிக்கு மூன்றாமிடத்தில் இந்த மாத ராசி பலன்கள் சனி கேது சஞ்சரிக்கிறார்;  குரு உடைய வீட்டில் சனியும் கேதுவும் சஞ்சரிப்பதால் பலவிதமான நன்மைகள் ஏற்பட கூடிய நல்ல விஷயங்கள். எதிர்பாராத விஷயங்கள் நடக்க கூடிய வாய்ப்புகள் ,ரொம்ப நாட்களாக தடைபட்டு வந்து கொண்டிருந்த வாய்ப்பு,  நீங்கள் தள்ளி போட்டு கொண்டு இருந்த விஷயங்கள் எல்லாம் முடிவெடுக்கக் கூடிய ஒரு நேரம், செய்தொழிலில் லாபம் சுய தொழிலில் லாபம் இவை எல்லாம் நடக்கும். புதிய வாகனங்கள் வாங்குதல் பழைய வாகனங்களை பழுது பார்த்தல் இந்த மாதிரியெல்லாம் நடக்கும். மூன்றாம் இடத்தில் குரு வீட்டில் கேது சஞ்சரிப்பதால் குருவுக்குரிய யோகம் என்ன ஆகும் என்றால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

இறைவழிபாடு தானங்கள்,  தர்மங்கள், அன்னதானங்கள், யாகம் வளர்த்தல், பரிகாரங்கள் எல்லாம் செய்து கொள்ளுதல் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பணம் கொடுப்பது இந்த மாதிரி எல்லாம் இறைவழிபாட்டில் நாட்டம் அதிகம் ஆகும். ஆன்மீகப் பயணங்கள் ஆன்மீக சுற்றுலாக்களில் இவையெல்லாம் செய்யவேண்டிய ஒரு காலகட்டமாக இந்த மாசம் விளங்கும். ராசிக்கு நான்காம் இடம் என்று சொல்லக்கூடிய அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள், அந்த இடத்தில்  குரு இருப்பது அவ்வளவு நன்மை செய்யாது, மகரத்தில் இருப்பார் குரு தேவை இல்லாத கல்யாணம் செய்ய முடியாது. திருமணப் பேச்சுகள் தடைபடும் செவ்வாயும் நாளில் இருக்கிறார்.

பூமி மனை வீடு எல்லாவற்றையும் ஆர்டர் பண்ண வேண்டியது, இடமாற்றம் செய்ய வேண்டியது இந்த மாதிரியான சூழ்நிலை அமையும். குருவோடு செவ்வாய் சேர்ந்திருப்பது உங்களுடைய சுய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வது பாகப்பிரிவினை செய்து கொள்வது அதை பழுது பார்ப்பது இந்த மாதிரி எல்லாம் இந்த மாதத்தில் உண்டாகும். ஆறாமிடம் என்ற இடத்தில் புதன் இருக்கிறார். குரு வீட்டில் புதன் இருக்கும் பொழுது, கல்விக்கே கேள்விகள் எல்லாம் சிரமமாக இருக்கும். படிப்பதில் கஷ்டம், கல்வித் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும்  சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். வங்கித்துறை, கம்ப்யூட்டர் இந்த மாதிரியான வேலை செய்பவர்கள் படிப்பவர்கள் இந்த மாதம் மந்தமாக இருக்கும். அதே போல தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும், சிறுசிறு பிரச்சினைகள் வந்து விலக கூடிய ஒரு நேரமாக இருக்கும்.

ஏழாமிடம் என்று சொல்லக்கூடிய இடத்தில் சூரியன் வழிபாடு ஆட்சி பலம் பெற்று மிகச் சிறப்பான யோகம்;  அரசு வேலை கிடைக்கும். அரசுத்துறை அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதிகள் இவர்களுக்கு நன்மை அதுமட்டுமில்லாமல் புதியதாக அரசு வேலைகளுக்கு காத்திருந்தவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் வேலை கிடைக்கக் கூடிய அமைப்பு சொந்த ஜாதகம் ஒத்துழைத்தால் கண்டிப்பாக நடக்கக்கூடிய அமைப்புகள் இந்த நேரத்தில் இருக்கும். தகப்பனார் வழி சொத்துக்கள் சில பேருக்கு வரும் தகப்பனார் மூலமாக ஏற்படக்கூடிய இன்னல்கள் விலகும். தகப்பனாருக்கு இருந்து வந்த நோய் நொடிகள் விலகும்.

எட்டாம் இடத்தில் சுக்கிரன்;  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அது பார்த்தோமென்றால் எட்டாமிடத்தில் உங்களுடைய ராசிநாதன் சஞ்சரிக்கிறார். ராசிக்கு சுக்கிரன் அதிபதி ஆறில் சஞ்சரிக்கும் பொழுது பலவிதமான நன்மைகள், தொழில் லாபம் சுய தொழில் லாபம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் எதிர்பாராத தனவரவு அதிர்ஷ்டம் யோகம் பழைய கடன்கள் நிவர்த்தியாகும். மனதிற்கு இனிமையான சம்பவங்கள் நடத்தல் இவை எல்லாமே நடக்கும். சுக ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் பொழுது நன்றாக இருக்கும். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பது மிகச் சிறப்பான யோகத்தை கொடுக்கும்.

பல விதமான நன்மைகள் ஏற்படும். வெளிநாடு தொடர்புகள் சிறக்கும், வெளிநாடு போக கூடிய அமைப்பு வெளி நாட்டில் இருக்கக்கூடிய ஏற்ப இருக்கக்கூடியவர்கள் இங்கு வந்து உதவி செய்யக்கூடிய அமைப்பு வரவில்லை என்றாலும் பணம் மூலம் உதவி செய்வது பொருள் மூலமாக உதவி செய்வது இவையெல்லாம் நடக்கும். ஏதாவது ஒரு பிரச்சனை சிக்கல்,  விசா இல்லை என்ற  எந்த ஒரு காரணத்திற்காகவும்,  விளையாட்டிற்காகவோ, படிப்பிற்காகவோ, மருத்துவத்திற்கும் சுற்றிப் பார்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். ஊர் விட்டு ஊர் போவதற்கு, அங்கு  அப்பா இருப்பார், குழந்தைகள் இருப்பார்கள், மனைவிகள் இருப்பார்கள் பாஸ்போர்ட் விசா கிடைத்து இருக்காது,

அந்த மாதிரியான தடைகள் எல்லாம் விலகி அந்நிய தேச யாத்திரை நடக்கக்கூடிய அமைப்புகள் இந்த மாதத்தில் நடக்கும்.  பொதுவாக துலாம் ராசி 100க்கு 75 சதவீத நன்மைகளை தரக்கூடிய மாதமாக இருக்கும் கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு 70% நன்மைகள், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்களுக்கு 80 சதவீத நன்மைகள், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 70 சதவீத நன்மைகள், மேற்கு ஏற்படக்கூடிய நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. துலாம் ராசிக்கு உண்டாகக்கூடிய சந்திராஷ்டமம் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டி சந்திராஸ்டம தினம் என்று பார்த்தால், சித்திரை மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணி 11 நிமிடம் முதல் சித்திரை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை காலை 10 மணி நாலு நிமிடம் வரை இன்று சந்திராஷ்டமம் இருக்கும் அதனால் சந்திராஷ்டம தினத்தில் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டமான வண்ணம்: வெள்ளை, பச்சை

அதிர்ஷ்டமான எண்: 7

அனுகூலமான திசை : கிழக்கு, மேற்கு

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

மகாலட்சுமி வழிபட்டு சகல நன்மைகளையும் அடையுங்கள்.

Categories

Tech |