துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். நீங்கள் தூரதேசத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல்கள் நல்லபடியாகவே வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் அபரிமிதமான லாபத்தை இன்று நீங்கள் ஓரளவு பெறலாம். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும்.
உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளையும் இன்று பெறுவார்கள். உடல்நிலையை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லாமல் சீராகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். சகோதரர் வகையில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆலோசனையும் ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக வந்து சேரும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அளவாக கொடுப்பது ரொம்ப நல்லது. இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றமும் மனதில் சந்தோசமும் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்