Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.. ஆதாயம் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வரவு இருக்கும், வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக்கொண்டு சிரமப்பட வேண்டாம். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. இன்று ஆன்மிக சிந்தனை மேலோங்கும். ஆன்மீகத்தையும் செலவிட நேரிடும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |