Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆலய வழிபாட்டில் ஆர்வம் செல்லும்.. நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று புகழ்மிக்க நபர்களை சந்தித்து மகிழும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி நல்ல சிறப்பை கொடுக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் செல்லும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். உங்களுக்கு இருந்த  தடை விலகி செல்லும். செல்வ நிலை ஓரளவு இருக்கும்.

எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். பண விஷயங்களில் பிறரை நாம் எந்தவித வாக்குறுதிகளையும் செய்து கொடுக்க வேண்டாம். அதேபோல மிக முக்கியமாக பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று எந்த பொறுப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், நிதானமாக இருங்கள், தெளிவான சிந்தனையுடன் இருங்கள் தேர்வு முடியும் வரை மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சொல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் வாரம் வாரம் சனிக்கிழமை அன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |