துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரின் தேவையை அறிந்து உதவிகளை மேற்கொள்வீர்கள்.இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாயம் பெருகும், புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில் பங்கேற்பார்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க இயலாதபடி தாமத நிலை இருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும், பலவகையில் நெருக்கடிகள் கொஞ்சம் இருக்கும்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கொஞ்சம் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். மாணவச் செல்வங்களும், பொதுமக்களும் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கம் நமக்கு சொல்ல கூறுகின்ற விஷயத்தை அலட்சியம் காட்டாமல் தயவு செய்து நடைமுறைப்படுத்துங்கள். மற்ற உலக நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்பிற்கு காரணம் அலட்சியப்போக்கு தான்.
அந்த நாட்டின் மக்கள் அலட்சிய போக்கை அதிகளவு கடைபிடித்ததால் தான் இவ்வளவு பிரச்சினைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆகையால் இவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, தயவு செய்து இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் நம்முடைய உடல் நிலையை பேணி பாதுகாத்து விடுவோம். அனைவருக்கும் நாம் ஒத்துழைப்பு கொடுப்போம். அதுமட்டும் இல்லை இந்த விஷயத்தை மற்றவர்களுக்கும் நீங்கள் தயவு செய்து முடிந்த அளவு பகிர்ந்து விடுங்கள்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்